கேரள நிவாரணத் தொகை ரூ.500 கோடி போதாது மிகக்குறைவு என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் 3 வாரங்களுக்கு மேலாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன்... இதுவரை கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்திருந்தார். வெள்ளதால் பாதிக்கப்படுள்ள கேரலாவிருக்கு பலரும் நிதியுதவியளித்து வருகின்றனர். 


இதையடுத்து, கேரள வெள்ளப்பாதிப்பை தேசிய பேரிடராக கால தாமதம் இன்றி மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று வலியுறுத்தினார். கேரளாவிற்கு பிரதமர் மோடி கொடுத்த 500 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணத் தொகை மிகக்குறைவு என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 



இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், பல லட்சம் கேரள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி அவர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.