கேரள அரசின் எதிர்பினை மீறி தேசிய கொடியினை ஏற்றினார் RSS இயக்க தலைவர் மோகன் பகவத்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியரசு தின விழாவையொட்டி, கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் RSS இயக்க தலைவர் மோகன் பகவத் கொடியேற்றுவார் என தகவல்கள் வெளியானது. 


இதனையடுத்து, பள்ளிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கல்வி அதிகாரிகள் மட்டுமே தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என கேரள அரசு சார்பில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டது.


மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களே கொடியேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது. 


இதனை நிராகரித்த RSS அமைப்பினர், திட்டமிட்டபடி  மோகன்பகவத் கொடியேற்றுவார் என அறிவித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் பதட்டமான சூழலில் காட்சியளித்தது. 


இந்நிலையில் மாநில அரசின் எதிர்ப்பை மீறி இன்று காலை பாலக்காடு பள்ளி ஒன்றில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றினார்.