நான் ஜனாதிபதியா? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பதில்
ஜனாதிபதி தேர்தல் போட்டியில் நான் இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்த ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மோகன் பகவத் கூறியதாவது:-
“நான் ஜனாதிபதி ஆக வேண்டும் என விரும்புவதாக மீடியாக்களில் சில வதந்திகள் வருகின்றன. அது முற்றிலும் தவறு. நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு பணியாற்றவே உள்ளேன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்வதற்கு முன்னதாகவே அனைத்து கதவுகளையும் நானே அடைத்துவிட்டேன். என்னுடைய பெயர் இடம் பெற்றாலும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.
அத்வானி, சுஷ்மா சுவராஜ், சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் பெயர்கள், பா.ஜ.க-வின் பரிந்துரைப் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.