RSS-ன் நீண்டநாள் கோரிக்கையான, இந்திய மொழிகளுக்கான முதல் தேசிய பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து மோடி தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதனிடையே RSS அமைப்பின் என்று நீண்ட நாட்களாக கோரிக்கையான, மாநில மொழிகளை பாதுகாக்கும் வகையில் தேசிய பல்கலைக்கழகத்தை அமைக்க மத்திய அரசு தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ராவை தலைமையிடமாக கொண்ட கேந்திரிய ஹிந்தி சான்ஸ்தான் என்ற அமைப்பு இந்த திட்டத்தை முன்மொழிந்து, அதனை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்துள்ள பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு அனுப்பியுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


முன்னதாக, இந்திய மற்றும் வட்டார மொழிகளை பாதுகாக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.