பிரதமர் பங்கேற்காததால் நாடாளுமன்ற கூட்டம் பாதியில் நிறுத்தம்!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கூட்டப்பட்ட அவசர கூட்டதிற்கு இம்ரான் கான் வராததால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கூட்டப்பட்ட அவசர கூட்டதிற்கு இம்ரான் கான் வராததால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு திரும்ப பெறும் இந்தியாவின் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டம் இன்று கூடியது. ஆனால் இந்த கூட்டத்துக்கு பிரதமர் இம்ரான் கான் வராமல் புறக்கனித்ததால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
காஷ்மீர் மாநிலமானது இந்தியாவின் அதிகாரபூர்வ பகுதி அல்ல, சர்ச்சைக்குரிய பகுதி என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. மேலமுஃ ஐ.நா. உட்பட பல இடங்களில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பிறநாடுகளும், ஐ.நா. அமைப்பும் தலையிட வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தநிலையில், காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்பபெறும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் இந்த அதிகார போக்கிற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில் ‘‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு தன்னிச்சையான முடிவு எடுத்ததை ஏற்க முடியாது’’ என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடி விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தை கூட்ட அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி அழைப்பு விடுத்து இருந்தார்.
அதிபர் அறிவித்தபடி இன்று காலை 11:00 மணியளவில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். ஆனால் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வரவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. சபாநாயகர் அவையை விட்டு வெளியேறி தனது அலுவலகத்துக்கு சென்றார்.