டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துருக்கி நாட்டின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாயின் மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.27-ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.


துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்தி அமெரிக்கா ஆணை பிரப்பித்தது. இதன் காரணமாக துருக்கியின் பணமதிப்பு வெகுவாக சரிந்து, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து, கடந்த மாதம் துவங்கி ரூ.70-னை தான்டியது.


இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியுடன் துவங்கியது. தற்போதைய நிலவரப்படி டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு 71.27-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.


இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது நமது நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்!