புது டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 5 விமானங்கள் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் நாடு திரும்பியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான திட்டத்திற்கு "ஆபரேஷன் கங்கா" என மத்திய அரசு பெயரிட்டுள்ளது. இதுவரை ஏர் இந்தியா விமானங்கள் மட்டுமே உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வார செயல்பட்டு வருகின்றன. ஏர் இந்தியாவுக்குப் பிறகு, தற்போது ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்களும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானங்கள் இயக்க உள்ளன. 


ஸ்பைஜெட் ஹங்கேரிக்கு (புடாபெஸ்ட்) சிறப்பு விமானங்களை இயக்கும். இந்த சிறப்பு விமானங்களுக்கு போயிங் 737 ரக விமானம் பயன்படுத்தப்படும். இந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் டெல்லிக்கு நேரடியாக அழைத்து வரப்படுவார்கள். இது குறித்து பைஸ்ஜெட் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த விமானம் டெல்லியில் இருந்து புடாபெஸ்டுக்கு சென்று, ஜார்ஜியாவின் குட்டாசி வழியாக மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும் என்று கூறப்பட்டுள்ளது.



ஸ்பைஸ்ஜெட் இயக்கவுள்ள விமானங்களின் விவரம்:


1. SG 9521 28-பிப்
2. மார்ச் 01 அன்று SG 9522
3. மார்ச் 02 அன்று SG 9522


இண்டிகோ நிறுவனமும் விமானங்களை இயக்கும்:


விமான நிறுவனமான இண்டிகோ உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை அழைத்து வர புடாபெஸ்டில் இருந்து விமானங்களை இயக்க உள்ளது. இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், நிறுவனம் புடாபெஸ்டிலிருந்து (ஹங்கேரி) விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது. திங்கள்கிழமை இஸ்தான்புல்லில் இருந்து புடாபெஸ்டுக்கு ஒரு விமானம் இயங்கும் என்றும், அது செவ்வாய்கிழமை டெல்லி திரும்பும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தார்.


மேலும் படிக்க | Russia-Ukraine War Live Updates: கீவில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம்


வார இறுதி ஊரடங்கு உத்தரவு விலக்கு:


இதற்கிடையில், கடந்த 5 நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ராணுவத்தினரிடையே நடைபெற்று வரும் கடும் சண்டையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற வழிவகை செய்யும் வகையில், உக்ரைன் தலைநகர் கீவில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்லும் 4 கேபினட் அமைச்சர்கள்:


இப்போது உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மோடி அரசு ஒரு புதிய உத்தியை உருவாக்கியுள்ளது. இன்று (திங்கள்கிழமை) காலை, பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார், இதில் பல மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 


உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு பத்திரமாக அழைத்து வரும் நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக, 4 கேபினட் அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், அங்கிருந்து இந்தியர்களை தாயகம் மீண்டும் அழைத்து வர தேவையான பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள்.


மேலும் படிக்க | உக்ரைனிற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய 'Mriya' விமானத்தை வீழ்த்திய ரஷ்யா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR