ஆபரேஷன் கங்கா! மேலும் 2 விமானங்கள் மூலம் தாயகம் திரும்பிய 500 இந்தியர்கள்..!!
ரஷ்யா உகை மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் நாட்டில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது.
ரஷ்யா உகை மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் நாட்டில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் சுமார் 16,000 மாணவர்கள் உள்ள நிலையில், அங்குச் சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வேறு வழிகளில் மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறதுது.
உக்ரைன் நாட்டை சுற்றி உள்ள அண்டை நாடுகளின் உதவியுடன் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் இருந்து சாலை வழியாக ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கு மாணவர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் திட்டத்திற்கு “ஆபரேஷன் கங்கா” என மத்திய அரசு பெயரிட்டுள்ளது.
இந்தியர்களை உக்ரையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளைத் தானே நேரடியாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உக்ரைனில் இருந்து ருமேனியா சென்ற, 219 இந்தியர்களை அழைத்து வர சென்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் விமானம், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இருந்து மும்பை வந்து சேர்ந்தது.
மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா - உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?
உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களை விமானத்திலேயே சென்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் வரவேற்றார். தாயகம் திரும்பிய மாணவர்கள் மகிழ்ச்சியில் ஜெய் ஹிந்த் முழக்கம் எழுப்பினர்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவித்த 250 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ருமேனிய தலைநகர் புக்கரெஸ்டில் இருந்து ஏர் இந்தியாவின் இரண்டாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையத்தில் வந்திறங்கியவர்களை, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ரோஜா மலர்களை வழங்கி வரவேற்றார்.
250 இந்தியர்களை ஏற்றி வந்த AI1942 என்ற இரண்டாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்டில். இந்தியர்களை மீட்க சென்ற ஏர் இந்தியாவின் மூன்றாவது விமானமான AI1940 விமானமும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றடைந்தது. புடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களுடன் தரையிறங்கிய “ஆபரேஷன் கங்கா” மூன்றாவது விமானத்தின் படங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR