சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை முடிந்ததை அடுத்து கோயில் நடை இன்று சாத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 27-ம் தேதி மண்டல பூஜையும், கடந்த 14-ம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இந்த மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


இந்நிலையில் இன்று பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி ஸ்ரீமூலம் திருநாள் ராகவவர்மா சிறப்பு தரிசனம் செய்கிறார். அதை தொடர்ந்து கோவில் நடை இன்று அடைக்கப்படும். அப்போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 17-ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.