சபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13 ஆம் தேதி மாலை 3 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒரு பெண் பக்தரும் சாமி தரிசனம் செய்ய முடியாதபடி தடுக்கப்பட்ட நிலையில் நேற்று அதன் நடை சாத்தப்பட்டு விட்டது.


அனைத்து வயதினரையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டபின், கோவிலுக்குள் நுழைய முயன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 10 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.


இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. குண்டூரைச் சேர்ந்த பத்து பெண் பக்தர்கள் குழுவாக மலையேற முயற்சித்தபோது வன்முறையாளர்களால் சூழப்பட்டு போலீசாரால் மீட்கப்பட்டனர். 


பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே, இருமுடி சுமந்து கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மதுரையைச் சேர்ந்த 9 வயது சிறுமி உட்பட பலர் ஐயப்ப தரிசனம் செய்தனர். பெண்களை தடுத்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, கேரளாவில் நடைபெற்ற போராட்டத்திற்கு பாஜக, சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.


இதனிடையே, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வது என திருவிதாங்கூர் தேவஸம் போர்டு கடந்த 19ஆம் தேதி முடிவு செய்தது. பல்வேறு அமைப்புகள் சார்பில் இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், எப்போது விசாரணை தொடங்கும் என்பதை இன்று முடிவு செய்தது உச்சநீதி மன்றம். 


இதற்கு நீதிபதிகள், “இது தொடர்பாக மேலும் 19 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன என்பது எங்களுக்கு தெரியும். இவை அனைத்தையும் எப்போது விசாரணைக்காக பட்டிலிட வேண்டும் என்பது குறித்து செவ்வாய்க்கிழமை (இன்று) முடிவு செய்வோம்” என்று அறிவித்தனர். அதன்படி இன்று நீதிபதிகள் சபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்கள் மீதும்  நவம்பர் 13ஆம் தேதி மாலை 3 மணிக்கு விசாரிக்கபடும் என கூறியது.