சபரிமலை வழக்கு: அரசியல் சாசன அமர்விற்கு மாற்றியது உச்சநீதிமன்றம்!
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10-லிருந்து 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி இல்லை.
இந்த தடையை அகற்றவேண்டும் என்றும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது, இவ்வழக்கினை அரசியல் சாசன அமர்விற்கு மாற்றியதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தரிசனத்தினை காண இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம், இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான முடிவுகளை நாடுமுழுவதும் அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.