சபரிமலை ஐயப்பன் கோவில் கூட்ட நெரிசலை சமாளிக்க புதிய முறையை கேரள போலீஸார் அறிமுகப்படுத்தியுள்ளது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து வயதினரையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டபின், கோவிலுக்குள் நுழைய முயன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 10 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.


இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இது தொடர்பாக 440 வழக்குகளை கேரள போலீஸார் பதிவுசெய்தனர். மேலும், நிலக்கல், பம்பா, சபரிமலை பகுதிகளில் போராட்டம் நடத்தியதாக 210 பேருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.


இதனடிப்படையில், மாநிலம் முழுவதும் போலீஸார் கடந்த 2 நாட்களாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், மாநிலம் முழுவதும் 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுக்-அவுட் சுற்றறிக்கை அனுப்பப்பட்டவர்களில் 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்தனர். இந்நலையில், சபரிமலையில் திரளும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தை வரைமுறைப்படுத்த கேரள போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில்,  ஆன்லைன் மூலம் இந்த ஆண்டுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.


sabarimalaq.com என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்கள் விருப்பப்படி தேதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்து அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம். ஏற்கனவே திருப்பதி போன்ற பெரிய கோவில்களில் இந்த வழக்கம் உள்ளது.


டிஜிட்டல் மூலம் கூட்டததைக் கட்டுப்படுத்துவது என்ற இத்திட்டத்துடன் நிலக்கல்லில் இருந்து பம்பா வரையிலான பேருந்துக்கான முன்பதிவும் செய்யப்படும். பெண் பக்தர்களுக்கும் சிரமமின்றி சபரிமலை செல்ல முன்பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.