Sabarimala Temple: சபரிமலை நடை திறப்பு, எந்த பக்தர்களுக்கு அனுமதி? விவரம் இதோ
ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! கருக்கிடக மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. 5 மாதத்திற்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா: ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! கருக்கிடக மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்த நிலையில், சுமார் 5 மாதத்திற்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை (Sabarimala) ஐயப்ப சுவாமி கோயில் மாதாந்திர பூஜைக்காக 5 நாள் திறக்கப்படவுள்ள நிலையில், தினமும் முன்பதிவு செய்த 5,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
கோயிலுக்கு வர விருப்பம் கொண்டு முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொண்டிருக்க வெண்டும். மேலும் 48 மணி நேரம் முன்னர் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொண்டு கொரோனா தொற்றுக்கான நெகடிவ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ:Sabarimala Temple: பக்தர்களின் தரிசனத்திற்காக சபரிமலை திறக்கிறது, எப்போது?
சபரிமலையில் ஆடி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படும் நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக கோயில் பூஜைகளில் தேவசம் போர்டு ஊழியர்களுக்கும் பூசாரிகளுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், நாளை முதல் பொது மக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கொரோனா தொற்று (Coronavirus) இரண்டாவது அலையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பக்தர்களிடமிருந்து சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கக்கோரி தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கொரிக்கைகையை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் தற்போது பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா நெறிமுறைகள் முழுவதுமாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் என்றும், அனைத்து வித கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ALSO READ: முருகனை போல சபரிமலை ஐயப்பனுக்கும் அறுபடை வீடு உண்டு..
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR