சபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை- சுப்ரீம் கோர்ட்
சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற அமர்வு விளக்கம் அளித்துள்ளது.
சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற அமர்வு விளக்கம் அளித்துள்ளது.
செப்டம்பர் 28, 2018 அன்று, முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், அனைத்து வயது பெண்களையும் அய்யப்பா கோவிலுக்குள் நுழைய அனுமதித்தது. இந்த தீர்ப்பு பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. உச்ச நீதிமன்றம் அனைத்து பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழையலாம் என்று தீர்ப்பு அளித்திருந்தாலும், ஒரு சில பெண்கள் மட்டுமே சன்னதிக்குள் நுழைய முடிந்தது.
அதேபோல நவம்பர் 14, 2019 அன்று, சபரிமலை வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், 3:2 என்ற ஆதரவின் அடிப்படையில், அனைத்து வயது பெண்களையும் அய்யப்பா கோவிலுக்குள் நுழையலாம் என்ற தீர்ப்பை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரி மலை ஐய்யப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது என்பது, காலம் காலமாக கடைபிடிக்கப்பட்ட சம்பிரதாயம். இந்நிலையில், அனைத்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, வயது வரம்பின்றி அனைத்து பெண்களும் சபரிமலை ஜயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்ற பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு குறிப்பிட்ட தரப்பினரிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் பெருவாரியான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.
மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் சார்பில் 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிப்பட்ட நம்பிக்கை ஒருவரின் உரிமையை பறிக்கக்கூடாது என்றும், சபரிமலை மட்டுமின்றி வேறு கோயில்கள், மசூதிகளிலும் பெண்கள் செல்ல கட்டுப்பாடு உள்ளதாகவும், அனைத்து மதத்தினரும் அவர்களது மத நம்பிக்கையை கடைபிடிக்க உரிமை உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட 3 நீதிபதிகள் வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்ததையடுத்து, அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
மேலும் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை, தொடரும் எனவும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்து.
இவ்வழக்கு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரிக்கப்போவதில்லை என 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விளக்கம் அளித்துள்ளது.
சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட கேள்விகள் பற்றி மட்டுமே விசாரணை நடத்தப்படும். தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டு உள்ள 50க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் குறித்து விசாரிக்க போவதில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.