மண் வளம் காக்க தனது 100 நாள் பைக் பயணத்தை லண்டனில் இருந்து சத்குரு தொடங்கியுள்ளார். 3 கண்டங்களில் 27 நாடுகளை உள்ளடக்கிய 30,000 கி.மீ பயணமாக இது இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக அளவில் மண் வளத்தை பாதுகாக்க சட்டங்கள் இயற்றவும், அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு மார்ச் 21 அன்று லண்டனில் இருந்து தொடங்கினார். 


வரலாற்று சிறப்புமிக்க ட்ரஃபல்கர் சதுக்கத்தில் 7 வயது சிறுமி கொடி அசைத்து இப்பயணத்தை தொடங்கி வைத்தார். இதையொட்டி, அங்கு ஏராளமான மக்கள் திரண்டு சவால்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளும் சத்குரு-வுக்கு வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் சத்குரு உரை நிகழ்த்தினார். மேலும், மற்றொரு பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.


லண்டனில் இருந்து புறப்பட்ட சத்குரு இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிளில் 3 கண்டங்களில் 27 நாடுகளுக்கு பயணித்து இந்தியா திரும்ப உள்ளார். இப்பயணத்தில் அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் வல்லுனர்கள் என பல தரப்பட்ட பிரபலங்களுடன் மண் வள பாதுகாப்பு குறித்து கலந்துரையாட உள்ளார். மேலும், அந்தந்த நாடுகளில் முன்னணி ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுக்க உள்ளார்.


மேலும் படிக்க | ஈஷா அறக்கட்டளையின் 'மண் காப்போம்' இயக்கத்துடன் இணைந்த 6 கரீபியன் நாடுகள் 


இது தவிர, மே மாதம் ஐவெரி கோஸ்ட் நாட்டில் ஐ.நா-வின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD) நடத்தும் COP 15 என்ற சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளார். இதில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டிலும் சத்குரு கலந்து கொண்டு உரை ஆற்ற உள்ளார்.


சத்குரு தொடங்கியுள்ள  மண் காப்போம் இயக்கத்தின் மூலம் உலகம் முழுவதும் சுமார் 350 கோடி மக்களிடம் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.  கடந்த வாரம் 6 கரீபியன் நாடுகள் தங்கள் நாடுகளில் மண் வளத்தை மேம்படுத்த மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிட்டத்தக்கது.


ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் (UNCCD) ஆய்வின் படி, தற்போது உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2050-ம் ஆண்டிற்குள் உலகில் உள்ள 90 சதவீதம் மண், அதன் வளத்தை இழந்து விடும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகளவில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாகுறை ஏற்பட்டு, பஞ்சம் மற்றும் பட்டினிச் சாவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ஈஷாவின் நதிகளை மீட்போம் இயக்கம்; சத்குருவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர் ...!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR