சாலையோரம் சமோசா விற்கும் வியாபாரியின் மகன் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் ஆறாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சாலையோரம் சமோசா கடை நடத்தி வருபவர் சுப்பா ராவ், இவரது மகன் மோகன் அப்யாஸ், சமீபத்தில் வெளியான ஐஐடி கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் ஆறாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.


தன்னுடைய இந்த சாதனைக்கு தனது பெற்றோர்களே காரணம் என தெரிவித்துள்ள மோகன், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான் தன்னுடைய முன்னுதாரணம் எனவும், அவர் போல ஆக விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.


ஐஐடி-யில் இயற்பியல் துறையில் ஆய்வு பட்டம் படிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


அது மட்டுமல்ல, மோகன் அப்யாஸ் ஏற்கனவே ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொறியியல், வேளாண்மை, மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வில் முதலிடமும், தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பொறியியல், வேளாண்மை, மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வில் ஐந்தாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.