டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மந்திரிசபையில் சமூக நலத்துறை அமைச்சர் சந்தீப் குமார் பெண்களுடன் இருப்பது போன்ற வீடியோ வெளியானது. இச்சம்பவம் பெரும் சர்ச்சை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்தீப் குமார் அமைச்சருக்கு எதிரான ஆட்சே பணைக்குரிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அவரை நீக்குவது தொடர்பாக ஆம் ஆத்மி முக்கிய தலைவர்கள் பங்கேற்ற உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நேற்று கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து அமைச்சர் சந்தீப் குமாரை பதவியிலிருந்து நீக்கி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.


 


பிறகு கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:- 


அமைச்சர் சந்தீப் குமார் தொடர்பான ஆட்சேபணைக்குரிய வீடியோ சிடி கிடைத்தது. பொதுவாழ்வில் மக்களுக்கு சேவை செய்வதில் நேர்மை என்பதில் ஆம் ஆத்மி உறுதியாக உள்ளது. அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது. சந்தீப் குமார் உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


 



 



 


 


இந்த நிலையில் சந்தீப் குமார் கூறியதாவது:-


 நான் ஒரு தலித் என்பதாலே என் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்காக எப்போதும் உழைப்பேன் எனவும், ஆம் ஆத்மி கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதாலேயே பதவி விலகியதாகவும், நான் எந்த தவறான காரியங்களிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.