ஆயுத விற்பனையாளரான சஞ்சய் பண்டாரியுடன், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு தொடர்பு இருந்ததாக குறிப்புகள் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


சஞ்சய் பண்டாரி அவர்கள் லண்டனில் ஆப்சன் இந்தியா சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் ஆயுத தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். பாஜக ஆட்சிக்கு வந்த போது ஆயுத தயாரிப்பு மற்றும் விற்பனையில் மோசடி நடந்திருப்பதாக உளவுத்துறை மத்திய அரசுக்கு தெரிவித்தது. இதனையடுத்து அமலாக்கத் துறை சார்ந்த அதிகாரிகள் சஞ்சய் பண்டாரிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றின.


கைப்பற்றிய ஆவணங்களின் மூலமாக சஞ்சய்  பண்டாரிக்கும் ராபர்ட் வதேராவுக்கும் ரகசியத் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் லண்டனில் உள்ள பிரையான்ஸ்டன் ஸ்கொயர் என்ற சொத்தை 'சாட்டா' என்பவர் பெயரில் ராபர்ட் வதேரா வாங்கியிருக்கலாம் என தெரிகிறது. அதாவது அந்த கட்டடத்தை மறுசீரமைப்பது குறித்து சஞ்சய் பண்டாரா அவர்கள் ராபர்ட் வதேராவுக்கு மெயில் மூலம் தகவல்களை அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


அதே நேரத்தில் 2010-ம் ஆண்டு ஏப்ரலில் ராபர்ட்  வதேராவுக்கு அனுப்பப்பட்ட மெயில் ஒன்றில் சொத்தை மறுசீரமைப்பது செய்ததற்கான செலவை திருப்பி அளிக்கும்படி 'சாட்டா' கேட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.


ஏற்கனவே ஹரியானாவில் பல்வேறு நில மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ராபர்ட் வதேராவின் மீது மேலும் ஒரு குற்றம் தெரியவந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரபப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர்கள் இது வெறும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தான் என்றும், இதில் எதுவுமே உண்மையே இல்லை என்று கூறுகின்றனர்.