அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதால் இருதிப்பணியில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை நிர்மாணித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பு அவருக்கு உண்டு.


குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக நரேந்திர மோடி பதவிவகித்த போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் 182 மீட்டர் உயரத்தில் 2,603 கோடி ரூபாய் செலவில் உலகிலேயே மிகப்பெரிய சிலையாக உருவாக்க கடந்த 2013 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.



இதையடுத்து, டெல்லியில் பேசிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கூறுகையில், 2013 ஆம் ஆண்டில் மோடி முதலமைச்சராக இருந்தபோது அளித்த வாக்குறுதியின் படி, உலகிலேயே மிகப்பெரிய சிலையாக உலகத் தரமான கட்டுமானத்துடன்  நிறுவியிருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த சிலையை சர்தார் வல்லபாய் பட்டேளின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதால் இருதிப்பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவத்துள்ளனர்.