நேற்று முன் தினம் காவல்துறை உதவியுடன் சபரிமலை கோவிலுக்குள் கனகதுர்கா(44), பிந்து(42) ஆகியோர் சென்றதை அடுத்து தற்போது இலங்கையை சேர்ந்த சசிகலா(47) சபரிமலை கோவில் சென்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலையில் 50-வயத்துக்கு குறைவான பெண்களை அனுமதித்தை எதிர்த்து அம்மாநில இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில், கோவில் செல்லும் பக்கதர்கள் பதற்றத்தில் உள்ளனர். 


இந்நிலையில நேற்று இரவு 9.30 மணி அளவில் காவல்துறை பாதுகாப்புடன் இலங்கையை சேர்ந்த சசிகலா என்ற பெண் சபரிமலை சென்றுள்ளார். தான் 46-வயதினை கடந்துள்ளதாக தெரிவித்த அவர், தான் மாதவிடாய் காலத்தை கடந்து விட்டதாக மருத்துவ சான்றிதழுடன் சபரிமலை வந்துள்ளார். எனினும் மாநிலத்தில் நிலவும் பதற்றம் காரணமாக காவல்துறையினர் சசிகலாவை இரவு 11 மணியளவில் பம்பையில் உள்ள முகாமிற்கு திரும்பி கொண்டு வந்துள்ளனர். 



சசிகலாவின் கடவுசீட்டு (Passport) கொண்டு அவரது வயது உறுதிப்படுத்தப் பட்டு பின்னர், பெண் காவலர் உதவியுடன் அவர் பாதுகாப்பாக பம்பை கொண்டுச் செல்லப்பட்டார் என காவல்துறை தெரிவித்துள்ளது.


முன்னதாக சசிகலாவின் பயணத்தினை யாரும் தடுக்கவில்லை எனவும், அமைதியான முறையில் அவர் தரிசனம் செய்து திரும்பிச்சென்றார் எனவும் தகவல்கள் பரவின. இந்த தகவல்கள் குறித்து இன்று உண்மை நிலவரம் வெளியாகியுள்ளது.


முன்னதாக கடந்த ஜனவரி 2-ஆம் நாள் கனக துர்கா(44), பிந்து(42) என்ற இரு பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் சென்றனர். இவர்களின் பயணத்தை எதிர்த்து கேரளா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.