புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் 23 பேரின் வங்கிக் கடனை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தள்ளுபடி செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினிஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில், 


புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களில் 23 பேர் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்றுள்ளதாகவும், நிலுவையில் இருக்கும் அவர்களின் கடன் தொகை முழுவதையும் உடனடியாக ரத்து செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஆர்பிஎஃப் வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ. 30 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், உயிர்த்தியாகம் செய்துள்ள வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்தக் காப்பீட்டுத் தொகையை விரைவில் அளிப்பதற்கான நடவடிக்கைகளை வங்கி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலளிக்கும் விதமாக, அவர்களின் வங்கிக் கடன் ரத்து செய்யப்படுகிறது. மேலும் 30 லட்ச ரூபாய்க்கு காப்பீடு தொகை அவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் கிடைக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்  பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.