பாதுகாப்பு பெட்டக வசதி, காசோலை வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உயர்த்தியுள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தை ஆண்டுக்கு 12 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்தலாம் என்று பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.100 கட்டணத்துடன் சேவை வரி வசூலிக்கப்படும். 


காசோலைகளை பொறுத்தவரையில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நிதியாண்டில் 50 காசோலைகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும், அதன் பிறகு ஒவ்வொரு காசோலைக்கும் ரூ.3 கட்டணம் வசூலிக்கப்படும். 25 காசோலைகள் கொண்ட புத்தகத்துக்கு ரூ.75 மற்றும் சேவை வரி பெறப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது. 50 காசோலைகள் கொண்ட புத்தகத்துக்கு சேவை வரி நீங்கலாக ரூ.150 கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இதே போல் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட சேவைகளை அளிப்பதற்கு ரூ.20 கட்டணமாக பெறப்படும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி குறிப்பிட்டுள்ளது. 


சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் மாதாந்திர சராசரி இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.