ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய பாதுகாப்பு உதவிக்குறிப்பைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்குபவர் மைக்ரோ பிளாக்கிங் (microblogging) தனது ட்விட்டரில் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார், KYC சரிபார்ப்புடன் மோசடி செய்பவர்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும்,  செக்யூர்டு இல்லாத அங்கீகரிக்கப்படாத பக்கங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று எஸ்பிஐ (State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. "உங்கள் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை! தனிப்பட்ட விவரம் / நிதித்தரவை இழப்பதில் இருந்து உங்களைக் காப்பாற்றக்கூடிய பாதுகாப்பு உதவிக்குறிப்பு இங்கே!" எஸ்பிஐ ட்வீட் (SBI Tweet) செய்தது. 


"சரிபார்க்கப்பட்ட செக்யூர்டு அம்சம் கொண்ட வலைத்தளம் மூலமாக மட்டுமே செயலிகளை பதிவிறக்குக. முகம் தெரியாத அல்லது அறிமுக இல்லாத நபர்களின் ஆலோசனையின் பேரில் எந்த செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்" என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. OTP, PIN, CVV உள்ளிட்ட முக்கிய விவரங்களை திருட வாய்ப்புள்ளது என்று வங்கி மேலும் எச்சரித்துள்ளது.


ALSO READ | SBI புதிய விதி: குறைந்தபட்ச இருப்பு குறித்து வங்கி அளித்த புதிய தகவல்


வாடிக்கையாளரின் தனிப்பட்ட விவரங்களைப் பெற மோசடியில் ஈடுபடுபவர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பிரதிநிதியாக உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. 


கடந்த வாரம் தான் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை ஃபிஷிங் மோசடி கும்பல் குறிவைத்து வருவதாக எச்சரித்தனர். ஒரு குறிப்பிட்ட வலைத்தள இணைப்பை உங்களுக்கு அனுப்பி தங்கள் கேஒய்சியைப் (KYC) புதுப்பித்துக் கொள்ளுங்கள் எனக் கேட்பார்கள். அதேபோல வங்கியில் இருந்து உங்களுக்கு ரூ .50 லட்சம் மதிப்புள்ள இலவச பரிசுகள் கிடைத்துள்ளது என வாட்ஸ்அப் மூலம் அல்லது மெசேஸ் மூலம் லிங்க் அனுப்புவார்கள். 


 



புதுடெல்லியை தளமாகக் கொண்ட சைபர்பீஸ் அறக்கட்டளை, ஆட்டோபோட் இன்போசெக் பிரைவேட் லிமிடெட் மற்றும் திங் டேங் போன்றவை "எஸ்பிஐ" என்ற பெயரில் இதுபோன்ற சம்பவங்களை ஆய்வு செய்தது. "இதுபோன்ற மோசடி செயலில் ஈடுபடும், அதனுடன் தொடர்புடைய அனைத்து டொமைன் பெயர்களும் பதிவு செய்யப்பட்டிருப்பது சீனா எனத் தெரியவந்துள்ளது" என ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. 


ALSO READ | SBI முக்கிய செய்தி: சில நிமிடங்களிலேயே மொபைல் மூலமே கணக்கை திறக்கலாம்


சீன ஹேக்கர்கள் (Chinese hackers) சமீபத்தில் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களை தங்கள் கே.ஒய்.சி (Know Your Customer) செயல்முறையைப் புதுப்பிக்கவும் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் கிடைத்திருக்கிறது எனக்கூறி மோசடியில் ஈடுபட இலக்கு வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 ஆம் ஆண்டில், 67 வயதான ஒரு முதியவர் சைபர் குற்றவாளிகளிடம் 3 லட்சத்துக்கு மேல் இழந்தார். மோசடியில் ஈடுபடும் கும்பல் உங்கள் KYC ஐப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.