கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடய் படுத்தி வருகிறது. பல அத்தியாவசிய பணிகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது KYC ஆவணங்களை ஆன்லைனில் புதுப்பிக்கலாம் என வங்கி ஏற்கனவே தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பல இடங்களில் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் KYC புதுப்பிக்கப்படும் என்று வங்கி இந்த மாத தொடக்கத்தில் ஒரு ட்வீட் மூலம் தெரிவித்திருந்தது.
இதேபோல், வாடிக்கையாளர்கள் KYC புதுப்பித்தலுக்காக வங்கிக் கிளைக்கு தனிப்பட்ட முறையில் செல்ல தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் KYC ஆவணங்கள் கட்டாயமாகும்.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான SBI ட்வீட் செய்து, "கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதாலும், பல மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உள்ளதாலும், தற்போதுள்ள இக்கட்டான நிலையை கருத்தில்கொண்டு, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் KYC புதுப்பித்தல் மேற்கொள்ளப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது." என்று கூறியது.
"KYC புதுப்பித்தலுக்காக வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. KYC புதுப்பித்தலுக்கான CIF களை பாதி அளவு முடக்கும் செயல்முறை 2021 மே 31 வரை நடக்காது" என்றும் ட்வீட்டில் கூறப்பட்டது.
ALSO READ: SBI செய்த பெரிய உதவி: ஒரே ஃபோன் காலில் இந்த பணிகளை எல்லாம் செய்து முடிக்கலாம்
SBI-யில் KYC ஐப் புதுப்பிப்பதற்கு அடையாளம் / முகவரிக்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள் இவையாகும். அடையாளச் சான்று மற்றும் முகவரியின் சான்றாக (நிரந்தர அல்லது தற்போதைய) இவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை அளிக்க வேண்டும்.
1) பாஸ்போர்ட்
2) வாக்காளர் அடையாள அட்டை
3) ஓட்டுநர் உரிமம்
4) ஆதார் அட்டை
5) மன்ரேகா அட்டை
6) பான் அட்டை
இந்த தகவல் குறித்து SBI இந்த மாத துவக்கத்தில் வெளியிட்ட ட்வீட் உங்கள் பார்வைக்கு:
Important announcement for our customers in view of the lockdowns in place in various states. #KYCUpdation #KYC #StayStrongIndia #SBIAapkeSaath #StaySafe #StayStrong pic.twitter.com/oOGxPcZjeF
— State Bank of India (@TheOfficialSBI) May 1, 2021
ALSO READ: SBI Big update: வீட்டில் இருந்தபடியே இனி இதையும் ஆன்லைனில் செய்யலாம், அசத்தும் SBI!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR