சீன எல்லைப் பகுதியில் உள்ள உத்தராகண்ட் மாநிலம் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசு சாலை வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புனித தலங்களை இணைக்கும் வகையிலும், எல்லை பகுதியில் சாலை வசதியை மேம்படுத்தும் வகையிலும், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் சார்தாம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை அடுத்து, மரங்கள், பாறைகளை வெட்டி சாலை அமைப்பதால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு அமைப்பு கடந்த 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) வழக்கு ஒன்றை தொடர்ந்தது. 


இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து ஆராய 21 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. ஆக்குழும் உத்தேசிக்கப்பட்டுள்ள 10 மீட்டர் அகல சாலைக்கு பதிலாக, 5.5 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கலாம் என பரிந்துரைத்தது. அதை அடுத்து, 5.5 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 


ALSO READ | Kerala HC: பிரதமரின் புகைப்படத்துடன் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் கொடுப்பது தவறா?


ஆனால், போர் காலத்தில் பெரிய ஏவுகணைகள் மற்றூம் பிற ராணுவ தளவாடங்களை எடுத்து செல்ல 10 மீட்டர் அகலமான சாலை தேவை என வாதிட்டது. சுற்றுச்சூழலை காரணம் காட்டி சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்துக்கு எதிர்பு தெரிவிப்பது, தேச நலனுக்கு விரோதமானது; எல்லையை பாதுகாக்கும் வீரர்கள் போர் புரிவதில் பிரச்சனை ஏற்படும் என மத்திய அரசு வாதிட்டது. 


இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட இந்த வழக்கின் மீதான விசாரணையில், இராணுவ தளவாடங்கள் செல்ல, இந்தியாவின் வட எல்லையில் மத்திய அரசு கொண்டு வரும் சார் தாம் (CharDham) நெடிஞ்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.


ALSO READ | உண்மை, அஹிம்சையின் அடையாளமான காசி புதிய ஒளி பெற்றுள்ளது: பிரதமர் மோடி


திட்டத்தின் ஒரு பகுதியாக 10மீ அகலத்தில் அனைத்து வானிலையிலும் பயன்படுத்த வல்ல சாலைகளை அமைக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசை அனுமதித்துள்ளது. அவற்றில் சில இந்திய - சீன எல்லைக்கு செல்லும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றம் ஆயுதப்படைகளின் உள்கட்டமைப்பு தேவைகளை புறக்கணிக்க முடியாது என தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


முன்னாள் எஸ்சி நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையில் ஒரு மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழு சாலை அமைக்கும் பணியில் சுற்றுச்சூழலின் நலனுக்காக அனைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், உயர் அதிகாரக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யும்.


ALSO READ | தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இந்த அடிப்படை வசதிகள் கிடையாது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR