15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு வரும் பெற்றோல் வாகனங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லியில் பெருகி வரும் மாசுவினை கட்டுப்படுத்தும் விதமாக 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட பெற்றோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்களை டெல்லியில் உபயோகிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board) இணையதள தகவலின் அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட பெற்றோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள் உபயோகிக்கும் பட்சத்தில் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். உத்தரவினை மீறு பயன்படுத்தும் பொதுமக்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் நீதிமன்ற உத்தரவின் படி சமூக ஊடக கணக்குகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்க வேண்டும் எனவும், இந்த சமூக ஊடகங்களின் வாயிலாக பொதுமக்கள் கொடுக்கும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.


முன்னதாக 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட பெற்றோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்களுக்கு தேசிய பசுமை தீர்பாயமும் (National Green Tribunal) தடைவிதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது!