இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் இந்த பொது நல மனுவை தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த மனுவில் கூறப்பட்டதாவது:- அரசியல் சாசனத்துக்குட்பட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை. எனவே இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், மேலும் தனது மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். 


இந்த மனு தலைமை நீதிபதிகள் டி.ஸ் தாகூர் மற்றும் நீதிபதிகள் ஏ.எம் கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் எந்த அவசரமும் இல்லை. தகுந்த நேரத்தில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்”என்று தெரிவித்தனர்.