அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற மறுப்பு :சுப்ரீம் கோர்ட்
அயோத்தி வழக்கு மீண்டும் அக்டோபர் 29 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், மொத்தமுள்ள பகுதியை மூன்று பிரிவினருக்கும் சம பாகங்களா பிரித்து கொடுத்து தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
கடந்த 1994 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்த மசூதிகள் அத்தியாவசியமில்லை எனக்கூறி இஸ்லாமியர்களுக்கு எதிரான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. அதில்,
அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றவேண்டிய தேவை இல்லை என நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண் கூறினார்கள். ஆனால் நீதிபதி அப்துல் நசீர் மாற்றவேண்டும் எனக் கூறினார். மூன்று நீதிபதிகளில் இரண்டு நீதிபதி மறுப்பு தெரிவித்ததால், இறுதியில் அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றவேண்டிய தேவை இல்லை என உத்தரவிடப்பட்டது.
மேலும் இந்த வழக்கை குறித்து பரிசீலனை செய்யவேண்டி இருப்பதால், அடுத்த மாதம் அக்டோபர் 29 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.