நீதிபதி கர்ணனுக்கு மருத்துவ பரிசோதனை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளால் வழக்கு தொடரப்பட்ட நீதிபதி கர்ணனுக்கு தற்போது மனநிலை குறித்த மருத்துவ பரிசோதனை நடத்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக கொல்கத்தா மருத்துவமனையில் வருகிற மே 5-ம் தேதி மருத்துவ பரிசோதனை செய்யப்படவேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
முன்னதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட கொல்கத்தா நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பதவி வகிக்கும் தன் மீது வழக்கு தொடர யாருக்கும் உரிமையில்லை என ஆஜராக மறுத்தார்.
மேலும் தன் மீது வழக்கு தொடர்ந்த சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகளையும் கொல்கத்தா ஐகோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டதோடு, அவர்களின் பேரின் பாஸ்போர்ட்டினை முடக்கவும் ஆணைப்பிறப்பித்தார்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தொடர் உத்தரவுகளை மதிக்காமல் மீண்டும் சர்ச்சையை எழுப்பும்படி கருத்தும், தீர்ப்பும் கூறும் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு மனநிலை குறித்த மருத்துவ பரிசோதனை நடத்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.