புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவது தொடர்பான பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். கோவிட் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மத்திய விஸ்டா கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் பொருளாதார நெருக்கடியும் சுகாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் தேவையா என்றும், அதற்கான கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


அதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளை நிறுத்தத் தேவையில்லை என்றும், மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தது. 


Also Read | CBI: ISRO உளவு வழக்கில் நம்பி நாராயணனின் வாக்குமூலம் என்ன? 


அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறிவிட்டது. 


பொதுநலன் மனுவை தாக்கல் செய்தவர்கள் மத்திய விஸ்டா திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர், கொரோனா காலத்தில் டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட பிற பொதுத் திட்டங்கள் குறித்து அடிப்படை ஆராய்ச்சி கூட செய்யவில்லை என்பது அவர்களின் தவறான உள்நோக்கத்தை காட்டுகிறது என்று உயர் நீதிமன்றம் கூறியதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உச்ச நீதிமன்ற அமர்வு (bench) கூறிவிட்டது. 


மனுதாரர்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்திலும் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.


பிரதான சென்டல் விஸ்டா திட்டம் என்பது, புதிய நாடாளுமன்ற கட்டடம், அதிகாரிகள் பிரதமர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவருக்கு புதிய குடியிருப்பு வளாகம் கட்டுவதற்கான கட்டுமானத் திட்டம் ஆகும். மேலும், பல்வேறு அமைச்சகங்களுக்கான புதிய அலுவலக கட்டிடங்களும் செண்ட்ரல் விஸ்டா திட்டத்திற்குள் கட்டப்படும்.  


Also Read | டெல்டா ப்ளஸ் வைரஸ், தடுப்பூசி செயல்திறனை குறைக்குமா; அரசு கூறுவது என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR