இஸ்ரோ உளவு வழக்கு தொடர்பாக கேரளா வரும் சிபிஐ குழு, நம்பி நாராயணனின் அறிக்கையை இன்று பதிவு செய்ய வாய்ப்புள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation (ISRO)) உளவு வழக்கில் விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனை விசாரிப்பதற்காக மத்திய புலனாய்வுத் துறையின் டெல்லி சிறப்புப் பிரிவு கேரளா சென்றடைந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation (ISRO)) உளவு வழக்கில் விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனை ஆதாரமின்றி கைது செய்து, வேண்டும் என்றே சிக்க வைத்தது தொடர்பாக விசாரிப்பதற்காக மத்திய புலனாய்வுத் துறையின் டெல்லி சிறப்புப் பிரிவு கேரளா சென்றடைந்தது.
இந்த விவகாரத்தில் ஏ. விஜயன், தம்பி எஸ் துர்காத, அன்றைய நகர போலீஸ் கமிஷனர் வி.ஆர்.ஜீவன் மற்றும் அன்றைய துணை இயக்குநர், புலனாய்வுப் பணியகம், ஆர்.பி.ஸ்ரீகுமார் என பலரின் பேரிலும் நம்பி நாராயண் மீது பொய் குற்றம் சுமத்தியதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read | June 29 History: உலகின் முதல் கர்ப்பிணி ஆண், பெண் குழந்தையை பெற்றெடுத்த நாள்
சிபிஐ மூத்த அதிகாரிகள் நம்பி நாராயணனின் அறிக்கையை பதிவு செய்ய விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளனர்.
கேரள மாநிலத் தலைநகரம். திருவனந்தபுரம் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் (Chief Judicial Magistrate) நீதிமன்றத்தில் சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னர் இந்த விசாரணை நடைபெறுகிறது. இஸ்ரோ ஊழல் குறித்து விசாரித்த அப்போதைய சிறப்பு புலனாய்வுக் குழுவின் (Special Investigation Team) தலைவர் சிபி மேத்யூஸ் உட்பட அவரது அணியினர் என மொத்தம் 18 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏ. விஜயன், தம்பி எஸ் துர்காத, அன்றைய நகர போலீஸ் கமிஷனர் வி.ஆர்.ஜீவன் மற்றும் அன்றைய துணை இயக்குநர், புலனாய்வுப் பணியகம், ஆர்.பி.ஸ்ரீகுமார் என பலரின் பேரிலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read | டெல்டா ப்ளஸ் வைரஸ், தடுப்பூசி செயல்திறனை குறைக்குமா; அரசு கூறுவது என்ன
இஸ்ரோவில் உளவு பார்த்தது தொடர்பான பிரச்சனை1994 ல் அம்பலமானது. அது தொடர்பாக நீதித்துறை டி.கே.ஜெயின் குழு (Justice DK Jain Committee) அமைக்கப்பட்டது. அந்த அறிக்கை தொடர்பாகவும் சர்ச்சைகள் எழுந்த நிலையில், அறிக்கையை ஆராயுமாறு சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணன் மற்றும் மூத்த கேரள காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அறிக்கையின் உள்ளடக்கங்களை பகிரங்கமாகப் பரப்புவதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
நம்பி நாராயணன், இஸ்ரோவின் மற்றொரு மூத்த அதிகாரி, மாலத்தீவு பெண்கள் இருவர் மற்றும் ஒரு தொழிலதிபர் என பலர் உளவு பார்த்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருந்த நிலையில், இந்த விவகாரம் மாநிலத்தில் இது ஒரு அரசியல் புயலை உருவாக்கியது. அந்த புயலில், அப்போதைய முதல்வர் கே கருணாகரனின் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெறும் சிபிஐ விசாரணையின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர்.
Also Read | North Korea: எங்கள் நாட்டில் கொரோனா இல்லவே இல்லை; அடித்து கூறும் கிம் ஜாங் உன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR