தேஜ் பகதூர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்த: SC
வாரணாசியில் போட்டியிட முயன்று வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்த தேஜ்பகதூரின் மனு தள்ளுபடி!!
வாரணாசியில் போட்டியிட முயன்று வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்த தேஜ்பகதூரின் மனு தள்ளுபடி!!
வாரணாசியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தேஜ் பகதூர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வாரணாசி மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட தேஜ் பகதூர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்று சில மாதத்துக்கு முன் வீடியோ வெளியிட்டவர் முன்னாள் வீரர் தேஜ் பகதூர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து புகார் கூறியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட இருப்பதாக தெரிவித்திருந்தார். வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாடி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்தது. இதையடுத்து வாரணாசி தொகுதியில் கடந்த மாதம் தேஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் சரியான விவரங்கள் இல்லை என கூறி தேர்தல் ஆணையம் தேஜின் வேட்பு மனுவை நிராகரித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தேஜ் பகதுார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக களமிறக்கப்பட்ட சமாஜ்வாதி வேட்பாளர் தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து இன்றைக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வாரணாசியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தேஜ் பகதூர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது நீதிமன்றம்.