அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளாக பொறுப்பு வகிப்பவர்கள் பிசிசிஐ-யில் உறுப்பினர்களாக இருக்கத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.


இது குறித்து பிசிசிஐ அமைப்பில் கொண்டு வரப்படவேண்டிய பரிந்துரைகளை லோதா குழு அவ்வப்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறது. இந்நிலையில், இதுகுறித்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளாக பொறுப்பு வகிப்பவர்கள் பிசிசிஐ-யில் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்றும், 70-வயதுக்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும், குற்ற வழக்குகளை சந்தித்து வருபவர்களும் பிசிசிஐ-யில் உறுப்பினராக இருக்க கூடாது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், மும்பை, சவுராஸ்டிரா, வதோதரா, விதர்பா ஆகிய கிரிக்கெட் சங்கங்களுக்கு நிரந்த உறுப்பினர் அந்தஸ்து வழங்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.