மேலாடையை நீக்காமல் தொடுவது பாலியல் வன்முறை அல்ல என்ற தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது SC
மேலாடையை நீக்காமல் தொடுவது பாலியல் வன்முறை அல்ல என்ற மும்பை நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்
மேலாடையை நீக்கமால் தொடுவது பாலியல் வன்முறை அல்ல என்ற மும்பை நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
மும்பை நீதிமன்றத்தின் (Bombay High Court) நாக்பூர் கிளை12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்ட்ட வழக்கை விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்ற (High Court) நீதிபதி புஷ்பா கனேடிவாலா, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், தோலுடன் தோல் தொடுவது போல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும் என்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரது ஆடைக்கு மேல் தொட்டு தொந்திரவு செய்தல் அல்லது தாடவுதல், பாலியல் வன்முறை இல்லை என தீர்ப்பளித்திருந்தார்.
பாலுணர்வு நோக்கத்துடன் ஒருவரைத் அவரது விருப்பம் இல்லாமல் அத்துமீறி தொடுவதை ஆங்கிலத்தில் groping என்பார்கள். அதாவது இதை தடவுதல் என்று கூறலாம். இந்த groping செயல் பாலியல் குற்றமல்ல என இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
Direct skin to skin contact இல்லாததால் இதை போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வாராது என அவர் அளித்த வினோத தீர்ப்பு பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதை கவனத்தில் கொண்ட, அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் தலைமை நீதிபதி போப்டேயிடம், "அந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்ததை ஏற்றுக் கொண்டு, தலைமை நீதிபதி, இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தார்.
ALSO READ | ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்முறை ஆகாது: மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR