ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்முறை ஆகாது: மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்பட்டும் பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 24, 2021, 11:47 PM IST
  • நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
  • பாலுணர்வு நோக்கத்துடன் ஒருவரைத் அவரது விருப்பம் இல்லாமல் அத்துமீறி தொடுவதை ஆங்கிலத்தில் groping என்பார்கள்.
  • நீதிமன்றத்தின் இந்த வினோதமான தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது
ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்முறை ஆகாது: மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு title=

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில், மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு ஒரு வினோதமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்ற (High Court) நீதிபதி புஷ்பா கனேடிவாலா, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், தோலுடன் தோல் தொடுவது தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும் என்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டுதொந்திரவு செய்தால் அது பாலியல் வன்முறை இல்லை என தீர்ப்பளித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடைகளை அகற்றாமல், சிறுமியின் மார்பகங்களை ஆடைக்கு மேல்  தொட்டால் அது பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் ரீதியிலான நோக்கத்துடன் சிறுமியின் தனிப்பட்ட அந்தரங்க தொடுதல், தாக்குதல் நடத்தல்,  அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் அந்தரங்க உறுப்புகளை உறுப்புகளை தொட வைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் நீதிபதி  கூறியுள்ளார்.

பாலுணர்வு நோக்கத்துடன் ஒருவரைத் அவரது விருப்பம் இல்லாமல் அத்துமீறி தொடுவதை ஆங்கிலத்தில் groping என்பார்கள். அதாவது இதை தடவுதல் என்று கூறலாம். இந்த groping செயல் பாலியல் குற்றமல்ல என இந்தஃ வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 
தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்ற கருத்து பொதுவாக உள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த வினோதமான தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | AAP MLA சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம்
 

Trending News