முத்தலாக் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது!!
மதம் தொடர்பான விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது. இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.
முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை 'தலாக்' கூறும் 'முத்தலாக்' முறை அமலில் உள்ளது. இந்த நடைமுறையால் பாதிப்படைந்த முஸ்லிம் பெண், இம்முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
ஏற்கனவே இவ்வழக்கில் 'முத்தலாக்' முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்திருந்தது. இதனையடுத்து இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றது.
இவ்வழக்கினை தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், முத்தலாக் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்கியது சுப்ரீம் கோர்ட்.
முஸ்லீம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் முத்தலாக் முறைக்கு இடைகாலத்தடை விதித்துள்ளது.
இஸ்லாமிய பெண்களுக்கு விவகாரத்து வழங்கும் முத்தலாக் முறை செல்லாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. மேலும் இவ்வவிகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை இல்லாத வகையில் பார்லிமென்ட்டில் சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மதம் தொடர்பான விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு வேறு சட்டம் இயற்றினாலோ அல்லது முத்தலாக்கிற்கு தடை விதித்தாலோ மட்டும் தான் இவ்விககாரத்தில் நிரந்தர தடை என்ற நிலை உருவாகும் என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
எனவே பார்லிமென்ட்டில் உரிய சட்டம் இயற்றும் வரை முத்தலாக் கூறி உடனடியாக விவாகரத்து செய்வதற்கு 6 மாத காலம் தடை விதிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.