தீர்ப்பில் பெற்ற வெற்றி பத்மநாபசுவாமியின் அருளாசி: திருவிதாங்கூர் மன்னர் குடும்பம்
மன்னர் குடும்பத்துக்கே கிடைத்தது வெற்றி மகுடம்... வழக்கு கடந்து வந்த பாதை.
கேரள மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபர் கோவில் நிர்வாகத்தில் அரச குடும்பத்திற்கு உரிமை உள்ளது என்று வழங்கப்பட்ட தீர்ப்பை, அரச குடும்ப உறுப்பினரான அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமி பாய் வரவேற்றுள்ளார். இது ஸ்ரீ பத்மநாப சுவாமியின் அருள் என்று அவர் கூறுகிறார்.
ALSO READ | உண்மையில் கடவுள் ராமர் ஒரு நேபாளி; இந்தியர் அல்ல: நேபாள PM ஒலி!
”இந்த வெற்றியை அரச குடும்பத்தின் வெற்றியாக நாங்கள் பார்க்கவில்லை. ஸ்ரீ பத்மநாபஸ்வாமி அவரது பக்தர்களுக்கு வழங்கிய அருள் ஆகவே நான் பார்க்கிறேன். இந்தக் கடுமையான காலகட்டத்தை கடக்க உதவிய ஒவ்வொருவருக்கும் மன்னர் குடும்பம் கடமைப்பட்டுள்ளது” என்று கவுரி லட்சுமி பாய் குறிப்பிட்டார்
முன்னதாக உச்சநீதிமன்றம் திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவில் நிர்வாகத்தில் அரச குடும்பத்திற்கு உரிமை உள்ளது என்று திங்கட்கிழமை அன்று தீர்ப்பளித்தது.
நூற்றுக்கால் நூற்றாண்டு கால பழமையான இந்த விஷ்ணு ஆலயத்தை, திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மனின் குடுமப்த்தினர், ஆயிரம் ஆண்டுகளாக நிர்வகித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஐநா அமைப்புகள் உலக கூட்டமைப்பின் கௌரவத் தலைவர் ஆன டாக்டர் எம் என்று அழைக்கப்படும் திரு. பூபேந்திர குமார் மோடி வரவேற்றுள்ளார். ”பல ஆண்டுகளாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் இந்த வழக்கின் காரணமாக இன்னலை சந்தித்தனர் ஆனால் அவர்கள் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தனர். அதன் பலனாக ந்த தீர்ப்பு வந்துள்ளது. எனது குடும்பம் இந்து மத சேவையில் பங்கேற்று வருகிறது என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார் இவர் குளோபல் சிட்டிசன் ஃபாரம் என்னும் அமைப்பின் நிறுவக தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டில் ,ஸ்ரீ பத்மநாபர் ஆலய வழக்கில், மன்னர் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த கௌரி லட்சுமிபாயை அவர் புதுடில்லிக்கு வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
வழக்கு கடந்து வந்த பாதை
2009 ஜனவரி மாதம் பத்மநாத சுவாமி கோவில் நிர்வாகத்தை மன்னர் குடும்பத்தில் இருந்து கேரள அரசுக்கு மாற்றவேண்டும் என்று கூறி ஐபிஎஸ் அதிகாரி சுந்தரராஜன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
இதைத்தொடர்ந்து கோயிலை அரசு நிர்வகிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை அடுத்து, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தொடு, கோவிலில் உள்ள ரகசிய அறைகளை திறக்க உத்தரவிட்டது
இதைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு கோவிலில் உள்ள ரகசிய நிலவறைகளில் இருந்து தங்கம் வெள்ளி வைடூரிய ஆபரணங்களும் பொருட்களும் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஆறாவது அறை திறக்கப்பட்டால் மன்னர் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி, நிலவறைய திறக்க மன்னர் குடும்பம் ஒப்புக்கொள்ளவில்லை.
இதையடுத்து நிலவறையில் கண்டெடுக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் ஆபரணங்களை மதிப்பிட நிபுணர் குழுவை அமைக்க மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
2013 டிசம்பர் 6 மன்னர் குடும்பத்தின் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மறைந்ததை அடுத்து அவரது வாரிசுகள் வழக்கு தொடர்ந்தனர்.
2020 ஜூலை 13-ஆம் தேதி இறுதியாக கோவில் நிர்வாகத்தில் மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ALSO READ | சீனா திரும்ப காத்திருக்கும் தமிழக பரோட்டா மாஸ்டர்கள்: சுவாரஸ்யமான மறுபக்கம்
வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை ஹைதராபத்தில் உள்ள சில்கூர் பாலாஜி ஆலயமும் வரவேற்றுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தர்மத்தின் வெற்றி என அக்கோவில் அர்ச்சகர் திரு. சவுந்திரராஜன் தலைமையிலான் குழு தெரிவித்துள்ளது.