புது டெல்லி: இந்த ஆண்டு கடைசி வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வி செயலர் (Secretary of Higher Education) அமித் காரே தெரிவித்துள்ளார்.  இன்று  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் (Human Resource Development) நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று (Coronavirus) அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது சாத்தியமில்லை. அதேநேரத்தில் கொரோனா நோயின் தீவிரம் படிப்படியாக குறையும் பட்சத்தில் வரும் மாதங்களில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பு இருக்கிறது. 


ALSO READ |  பள்ளிகள் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்த மத்திய அரசின் முடிவு என்ன..!!!


அதாவது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதம் வரை திறக்கும் வாய்ப்பு குறைவு என மத்திய அரசு தரப்பில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் இந்த கல்வியாண்டு பூஜ்யம் கல்வி ஆண்டு (Zero Academic Year) என அறிவிக்கப்படாது என உயர்கல்வி செயலர் அமித் காரே (Amit Khare) நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் விளக்கியுள்ளார். 


உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள  கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இறுதி வாரம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், எப்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. தற்போது அதுக்குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. 


ALSO READ |  Corona: பள்ளி திறப்பு குறித்து மாநிலங்களிடமிருந்து Feedback கேட்கும் மத்திய அரசு


பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து இறுதி அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் மத்திய அரசு தெளிவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.