பள்ளி மாணவர்களின் கணினி இனி கண்காணிக்கப்படும்!
மத்திய கல்வி மத்திய வாரியம் (CBSE), வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையின்படி பள்ளி கணினிகளில் கண்காணிப்பு மற்றும் வடிகட்டுதல் மென்பொருள் நிறுவலுக்கு அவசியம் என தெரிவித்துள்ளது.
'தி ப்ளூ வேல் சவால்' காரணமாக பள்ளி சிறார்கள் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர், இத்தனை தடுக்கவே இந்த முயற்சி என தெரிகிறது.
சமிப காலமாக 'தி ப்ளூ வேல் சவால்' பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, இந்தியாவில் இதுவரை மூன்று மாணவர்கள் இந்த விளையாட்டிற்கு அடிபணிந்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். ஒரு மாணவர் உயிரை இழந்தார். இந்நிலையில் மத்திய கல்வி வாரியத்தின் இந்த முடிவு வரவேற்கதக்கது.
இதன்படி சமூக ஊடக நிறுவனங்களை கூகிள், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ ஆகியவற்றில் உடனடியாக 'தி ப்ளூ வேல் சவால்' விளையாட்டின் இணைப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நீல திமிங்கல விளையாட்டு என்றால் என்ன?
ஆபத்தான நீல திமிங்கலம் விளையாட்டு அல்லது நீல திமிங்கிலம் சவால் என்பது ரஷ்யாவில் உருவானது. பங்கேற்கும் வீரர்கள் 50 கட்டளை பணிகளைத் தொடர்ச்சியாக செய்யவேண்டும், இறுதிகட்டமனது மரணத்தில் முடிவடையும். போட்டியின் பங்கேற்பாளர்கள், தாங்கள் பூர்த்தி செய்யப்பட்ட சவால்களின் புகைப்படங்களினை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
திகில் திரைப்படம் பார்த்தல், அசாதாரண மணி நேரங்களில் விழித்துகொள்ளுதல் போன்றவை இந்த கட்டளைகளுக்குள் அடங்கும்.
இந்த விளையாட்டு பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைக் பறித்துள்ளது.