School Reopen: விதிகள் வந்துவிட்டன! பள்ளி திறப்படுமா? இல்லையா? மாநிலத்தின் திட்டம் என்ன?
அன்லாக் -4 வழிகாட்டுதல்களில் ஆரம்ப மற்றும் தொடக்கப் பள்ளிகளை அரசாங்கம் திறக்காது. ஆன்லைன் வகுப்புகள் (Online classes) முன்பு போலவே, இவர்களுக்கு தொடரும்.
புது டெல்லி: அன்லாக்-4 (Unlock-4) தளர்வுகளில் வெளியிடப்பட்ட பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களுக்குப் பிறகு, இப்போது மாநில அரசுகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு (Classes 9 To 12) பள்ளிகளை திறக்க விதிகள் மற்றும் விதிமுறைகள் (Guidelines for School Reopening) வகுக்கப்பட்டுள்ளன.
மூத்த வகுப்பு குழந்தைகளுக்கான பள்ளிகளைத் திறப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது (Standard Operating Procedure for School Reopen). இந்த வழிகாட்டுதலின் கீழ், 9 முதல் 12 வரை மாணவ-மாணவிகள் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதியுடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் பாடம் கற்கலாம்.
இந்த மூன்று மாநிலங்களில் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள்:
அரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திர மாநில அரசுகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை வெவ்வேறு கட்டமாக திறக்க தயாராகி வருகின்றன. அரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால் சிங் குஜ்ஜார் "ஹரியானா பள்ளியைத் திறக்க தயாராக உள்ளது" என்று கூறினார். இதற்காக பட்ஜெட் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளோம். பள்ளிகளை சுத்திகரிக்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, மாணவர்களை கோவிட் -19 இலிருந்து பாதுகாக்க பிற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்னல் மற்றும் சோனபட் மாவட்டத்தில் முதலில் 10 மற்றும் 12 வகுப்பு மான்வர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.
டெல்லி (Delhi) மற்றும் தமிழ் நாடு (Tamil Nadu) மாநில அரசுகள் தற்போதைக்கு பள்ளிகள் திறக்க எந்தவித திட்டமும் இல்லை. கொரோனா கட்டுக்குள் வந்த பின்பு பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
ALSO READ |
செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு..!!!
குழந்தைகளின் நலன் தான் முக்கியம்!! தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை
முன் தொடக்க மற்றும் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படாது:
அன்லாக் -4 வழிகாட்டுதல்களில் ஆரம்ப மற்றும் தொடக்கப் பள்ளிகளை அரசாங்கம் திறக்காது. ஆன்லைன் வகுப்புகள் (Online classes) முன்பு போலவே, இவர்களுக்கு தொடரும்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களை அறிந்து கொள்ளுங்கள்:
செப்டம்பர் 21 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அன்லாக் -4 இன் கீழ், எஸ்ஓபி (SoP) வெளியிடப்பட்டது. பள்ளியில் படிக்க வர விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். மாணவர்களிடையே குறைந்தது 6 அடி தூரம் இருக்க வேண்டும். இது தவிர, முக அட்டை / முகமூடி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மையம் கொண்ட பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு முழுமையாக சுத்திகரிக்கப்படும். தற்போது பயோமெட்ரிக் வருகை இருக்காது. பள்ளிக்கூடத்திற்குள் கூட, குறுகிய இடைவெளியில் கைகளை கழுவ வேண்டும் அல்லது கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும். இங்கேயும் அங்கேயும் துப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது.