வடகிழக்கு டெல்லியில் வன்முறை காரணமாக அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 7 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடங்கின. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.


இந்தநிலையில் வன்முறை பாதித்த பகுதிகளில் இன்று கடைகள் மற்றும் பிற நிறுவனங்கள் திறக்கப்பட்டன. இதன்மூலம் அப்பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல மெல்ல  திரும்பி வருகிறது. மேலும் வன்முறை நடத்தப்பட்ட வடகிழக்கு டெல்லியில் மார்ச் 7ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.