பெங்களூரு நகரில் முதன்முறையாக நடைபெறும் தமிழ் புத்தக திருவிழாவை அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூரு நகரில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் முதன்முறையாக அல்சூர் ஏரி கரை அருகே உள்ள தமிழ் சங்கம் வளாகத்தில் நேற்று (25.12.2022) தொடங்கிய தமிழ் புத்தகத் திருவிழா தொடர்ந்து எட்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. 


கர்நாடக தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் இணைந்து நடத்தும் இந்த புத்தகத் திருவிழாவை அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்தார். 


இந்த விழாவில் சிவாஜி நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்சத், அணு விஞ்ஞானி தவமணி, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையர் ராம் பிரசாத் மனோகர், பேராசிரியர் வணங்காமுடி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்த் குமார் ஆகியோர் தலைமை ஏற்றனர். 25 புத்தக பதிப்பீட்டு நிறுவனங்கள் இந்த தமிழ் புத்தக விழாவில் கலந்து கொண்டுள்ளனர். 


மேலும் படிக்க | Eclipse 2023: 2023 புத்தாண்டில் ஏற்படவிருக்கும் சூரிய சந்திர கிரகணங்கள்



புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து தமிழில் பேசிய சிவாஜி நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்சத், தனது தொகுதியில் அதிக தமிழர்கள் இருப்பதால் அவர்களிடம் உணர்வுப்பூர்வமாக, அவர்களது தாய்மொழியில் பேசுவதற்காக தான் தமிழை கற்றுக் கொண்டதாக கூறினார். 


தொடர்ந்து நிகழ்வில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை,"உலகம் முழுவதும் அறிவியல் மாநாட்டிற்கு செல்லும்போது நம் சாதனையை குறித்து அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். அப்போது, தமிழ்வழி கல்வியில் பயின்றதால் அதற்கான பதிலை அளிப்பது எளிதாக அமைந்தது. மேலும் சுயசிந்தனைக்கு தாய்மொழி உதவியதால் விஞ்ஞான துறையில் சாதனைகள் நிகழ்த்த எளிதாக இருந்தது" என்றார்.


உலகம் முழுவதும் எந்தப் பகுதிக்கு தமிழர்கள் சென்றாலும் தமிழை சுவாசித்து தமிழராக வாழ்ந்து தாய் மொழியை நேசித்து வாழ வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையர் ராம் பிரசாத் மனோகர் கூறினார். 


பெங்களூரு நகரில் நடந்து வரும் தமிழ் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ள மாணவர்களிடையே தமிழை கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் திருவிழாவில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தலா ரூ.100 மதிப்புள்ள புத்தக அன்பளிப்புச்சீட்டு அளிக்கப்படுகிறது. 


தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் 20 மாணவர்களுக்கு அன்பளிப்புச்சீட்டை மயில்சாமி அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்சத் ஆகியோர் வழங்கினர். பெங்களூரு நகரில் முதன்முறையாக நடைபெறும் தமிழ் புத்தகத் திருவிழா மூலமாக தங்களுக்கு விரும்பிய தமிழ் புத்தகங்களை வாங்க மிகவும் பயனுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


கர்நாடகத்தில் வாழும் தமிழர்களிடையே, குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளியில் படிக்கும் தமிழ்க் குழந்தைகளிடம் தமிழ்மொழியை கற்கும் ஆர்வத்தை தூண்டிவிடும் நோக்கில் பல வகையான மொழித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்நிகழ்ச்சிகளில் தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தமிழுணர்வை ஊக்குவிக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | Latest Weather Update: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும்! வானிலை முன்னறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ