புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று முதல் தொடங்குகிறது. இந்த கட்டத்தில், அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரல் வரவு செலவுத் திட்டத்திற்கான கோரிக்கைகளைப் பற்றி விவாதித்து நிதி மசோதாவைப் பற்றி விவாதித்து அவற்றை நிறைவேற்றுவதாகும். இருப்பினும், மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் மும்மரமாக தொடங்கியுள்ள நேரத்தில் இந்த அமர்வு தொடங்குகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்தத் தேர்தல்களின் எதிரொலி நாடாளுமன்றத்திலும் கேட்கப்படும் என்று கருதலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து விவாதிக்கப்படும்
பெட்ரோல், டீசல் (Petrol-Diesel) மற்றும் எல்பிஜி விலைகள் (LPG) உயர்ந்து கொண்டிருக்கின்றன, சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை தாக்க முயற்சிக்கலாம். பணவீக்கம் குறித்த கேள்வியில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசாங்கத்தை தாக்குகின்றன. கொரோனாவின் (Coronavirus) தொற்றுக்களின், வேகம் மீண்டும் காணப்படுகிறது, மேலும் இந்த விவகாரத்திலும் எதிர்க்கட்சிகளிடமிருந்து கேள்விகள் கேட்கப்படும். அதே நேரத்தில், டிஜிட்டல் ஊடகங்களுக்காக உருவாக்கப்பட்ட புதிய விதிகள் குறித்து, எதிர்க்கட்சி அரசாங்கத்தை சூழ்ந்து கொள்ளாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.


Also Read | Budget 2021: இந்தியாவின் முதல் பட்ஜெட்டை வழங்கியவர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா


மானியங்கள் மற்றும் நிதி மசோதாவிற்கான பட்ஜெட் கோரிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற முத்திரையைப் பெறுவதே அரசாங்கத்தின் குறிக்கோள்
அரசாங்கப் பணிகளைப் பொருத்தவரை, பட்ஜெட் அமர்வின் (Budget Session) இந்த பகுதியில் அரசாங்கத்தின் மிகப்பெரிய குறிக்கோள், பட்ஜெட்டின் மானியங்களுக்கான கோரிக்கைகள் மற்றும் நிதி மசோதா குறித்த பாராளுமன்ற முத்திரையைப் பெறுவதாகும். பட்ஜெட்டுக்கான கோரிக்கைகள் குறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை முதல் கலந்துரையாடல் தொடங்கும். ரயில்வே மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்த விவாதம் முதலில் தொடங்கப்படும்.


முன்னதாக கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை (Budget 2021) மக்களவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் மீது தனி விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி 4 நாட்கள் நடந்த தொடர் அமளியால் சபை முடங்கியது.


முதல் அமர்வுக்கு பின்னர் மாநிலங்களவை பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதியும், மக்களவை 13-ஆம் தேதியும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் (Parliament) இன்று மீண்டும் கூடுகிறது.


இந்த தொடரில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (திருத்தம்) மசோதா, நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி மசோதா, மின்சார (திருத்தம்) மசோதா, கிரிப்டோ நாணயம் மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயம் ஒழுங்குபடுத்தும் மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


எனவே மூத்த அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் குறைவு என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் விவாதங்களில் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


ALSO READ: Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR