நாடு முழுவதிலும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடங்கி விட்ட நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரித்வாரில் நடந்து வரும் கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, நேற்று, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) அனைவரும் இருந்த இடத்தில் இருந்தே கடவுளை வணங்க வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.


 ராம் நவமி அயோத்தியில் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படும்.  ஆனால் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று காரணமாக, வரும் 21ம் தேதி வரும் ராமநவமி அன்று, பக்தர்கள் வீட்டில் இருந்தே ராம நவமியை கொண்டாட வேண்டும் என அயோத்தியில் உள்ள சாதுக்கள் வலியுறுத்தியுள்ளனர். 


ALSO READ | கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் வேம்பு, கற்றாழை!

ராம நவாமி தினத்தன்று வெளியில் இருந்து மக்கள் அயோத்திக்கு வந்தாலோ, அயோத்தியில் உள்ள மக்கள் கோவிலில் கூடினாலோ, கொரோனா வைரஸ் தொற்று பரவலாம். அதனால்தான் இந்த முறை மக்கள் ராம் நவாமி தினத்தன்று வீட்டிலேயே இருந்து பகவான் ராமரை வணங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 


அரசு வகுத்துள்ள விதிகளை மக்கள் பின்பற்ற என  கேட்டுக்கொள்வதாக, சாதுவான சந்த் பிரேம் தாஸ் கூறினார். எனவே, அனைத்து பக்தர்களும் இந்த ஆண்டு வீட்டிலேயே பண்டிகையை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.33 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,300 பேர் இறந்து விட்டனர்.


இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16,79,740 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,341 இறப்புகளும் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 12 கோடியை எட்டியுள்ளது. 


ALSO READ | Kumbh Mela: இருந்த இடத்திலிருந்தே கடவுளை வணங்குக, கும்பமேளாவிற்கு வரவேண்டாம்...


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR