கர்நாடகாவின் சில மாவட்டங்களில் 144 தடை உத்தரவு!
கர்நாடகாவில் நாளை திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கர்நாடகாவின் சில மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது!
கர்நாடகாவில் நாளை திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கர்நாடகாவின் சில மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது!
கர்நாடகம் உள்ளிட்ட இந்தியாவின் தெற்கு பகுதிகளை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். இவரது பிறந்தநாளினை அரசு விழாவாக கர்நாடக அரசு கொண்டாடி வருகிறது. வருடம்தோறும் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டு வந்தாலும், கர்நாடகாவில் பாஜக-வினர், திப்பு ஜெயந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை மாநிலத்தில் பிரச்சணைகள் ஏதும் நடைபெறாமல் இருக்க குடகு, ஹுப்ளி, தார்வாட் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்தி, திப்பு சுல்தான் கொடூரமாக கொன்றுகுவித்ததாகவும், சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை பெறும் நோக்கத்தில் மாநில அரசு இந்த விழாவினை நடத்துவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் சமீபகாலமாக இந்த விழாவிற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகின்றது.
முன்னதாக திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், திப்பு ஜெயந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து நாளை நடைபெறும் திப்பு ஜெயந்தி விழாவில் பங்கேற்பதாக இருந்த முதல்வர் HD குமாரசாமி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க கர்நாடகாவின் குடகு, ஹுப்ளி, தார்வாட் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது