பேராட்டம் காரணமாக டெல்லி வடகிழக்கு பகுதிகளில் 144 தடை
டெல்லியில் நேற்று மோதல் ஏற்பட்ட வடகிழக்கு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று மோதல் ஏற்பட்ட வடகிழக்கு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை அதை அமல்படுத்துவதில் பின்வாங்க மறுத்துவிட்டார்.
இதன் விளைவாக வடகிழக்கு டெல்லி மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளதால், ஜாமியா நகர் பகுதியில் ஏற்பட்ட போராட்டம் இன்னும் அமைதியடையவில்லை. ஜாபராபாத் மற்றும் சீலாம்பூர் பகுதிகளில் இரண்டு மணியளவில் வன்முறை தொடங்கியது. இந்த வன்முறை வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
செவ்வாயன்று, கிழக்கு டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன, கிளர்ச்சியாளர்கள் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மீது கற்களை வீசினர், இதைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்." இந்த கலவரம் குறித்து டெல்லி காவல்துறை செய்தி தொடர்பாளர் அனில் மிட்டல் தெரிவிக்கையில்., அமைதியான போராட்டத்தை நடத்திய பின்னர் எதிர்ப்பாளர்கள் திரும்பிச் செல்லும்போது மதியம் 1.30 முதல் 1.45 மணி வரை வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஆனால் திடீரென்று அந்த ஆர்ப்பாட்டத்தில் இருந்த சில குற்றவாளிகள் பேருந்துகளில் கற்களை வீசினர், அதைத் தொடர்ந்து வன்முறை எதிர்ப்பாளர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீச வேண்டியிருந்தது," என குறிப்பிட்டுள்ளார்.
கல் வீச்சின் போது பலர் காயமடைந்ததாகத் தெரிகிறது. டெல்லி போலீஸ் வட்டாரங்களின்படி, போலீசார் ஒரு புல்லட் கூட சுடவில்லை, கூட்டத்தை கலைக்க தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை மட்டுமே வீசினர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று மோதல் ஏற்பட்ட வழக்கிடக்கு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் - போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது.