பாஜக மூத்த தலைவர் பன்ஷிலால் உடல்நலக் குறைவால் காலமானார்!
சத்தீஸ்கர் பாரதிய ஜனதா மூத்த தலைவர் பன்ஷிலால் மஹ்தோ சனிக்கிழமை காலமானார்.
சத்தீஸ்கர் பாரதிய ஜனதா மூத்த தலைவர் பன்ஷிலால் மஹ்தோ சனிக்கிழமை காலமானார்.
79 வயதான தலைவர் கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.
மஹ்தோவின் மரணத்திற்கு முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா யுகே மற்றும் பல பாஜக தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
"முன்னாள் கோர்பா பாராளுமன்ற உறுப்பினர் பன்ஷிலால் மஹ்தோ ஜி இறந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மாவுக்கு அமைதியும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வருத்தத்தைத் தாங்கும் பலமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்று பாகேல் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் அனுசுயா யுகேயும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "கோர்பாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பன்ஷிலால் மஹ்தோவின் மறைவால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். பிரிந்த ஆத்மாவை ஆறுதல்படுத்தவும், இந்த வருத்தத்தை தாங்க அவரது குடும்பத்தினருக்கு பலம் கொடுக்கவும் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.