காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் M.கமலம் காலமானார்!!
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.கமலம் வயது முதிர்வால் காலமானார்!!
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.கமலம் வயது முதிர்வால் காலமானார்!!
கோழிக்கோடு: கேரள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.கமலம் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 95, நீண்ட காலமாக வியாதிகளால் அவதிப்பட்டு வந்த வந்த நிலையில், வயது முதிர்வால் இன்று காலமானார்.
அவரது இறுதி சடங்குகள் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் அவரது இல்லத்தில் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். கேரள வரலாற்றில் காங்கிரஸின் மிக முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார். கே கருணாகரனின் அமைச்சரவையில் ஒத்துழைப்பு அமைச்சராக பணியாற்றினார்.
கமலம் மகளிர் ஆணையத் தலைவர், KPCC துணைத் தலைவர், KPCC பொதுச் செயலாளர் மற்றும் AICC உறுப்பினராகவும் பணியாற்றினார்.
1946 ஆம் ஆண்டில் கோழிக்கோட்டில் இருந்து உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட்டு அரசியல் நுழைந்தார். இந்த தேர்தலில் அவர் கார்ப்பரேஷன் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மறைந்த மாம்பட்டா சமிகுட்டியின் மனைவி கமலம், மகன்கள் எம் யதீந்திரதாஸ், M.முரளி, M.ராஜகோபால், M.விஜயகிருஷ்ணன் மற்றும் மகள் பத்மஜா சாருததன்.