பெங்களூரு: முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சி.கே. ஜாபர் ஷெரிப் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னிங்காம் சாலையில் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஷெரிப் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். கடந்த வெள்ளி அன்று நமாஸ் செல்கையில் மயங்கி விழுந்த ஷெரிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


85-வயதாகும் ஷெரிப்பின் மறைவு குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டு ராவ் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது... இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், பலமுறை MP, இந்தியாவின் வெற்றிகரமான ரயில்வே துறை அமைச்சர். கர்நாடக மாநிலத்தின் உண்மை மைந்தன் மண்ணுலகை விட்டு பிறிந்தார்" என குறிப்பிட்டுள்ளார்.



முன்னதாக நேற்று இரவு பிரபல நடிகரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அம்பரீஷ் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் தற்போது மற்றொரு காங்கிரஸ் தலைவர் இறந்துள்ள விஷயம் அக்கட்சிக்கு பெரும் அதிர்சி செய்தியாய் அமைந்துள்ளது.