கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.ஐ.ஷானவாஸ் (வயது 67) உடல்நலக்குறைவால் காலமானார்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி MP-ஆன M.I.ஷானவாஸ் (வயது 67) உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை M.I.ஷானவாஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று பிற்பகல் கொச்சிக்கு எடுத்துச் செல்லப்படும் என தகவகள் வெளியாகியுள்ளது. 



எம்பி M.I.ஷானவாஸ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.